பள்ளி மாணவி ஆசிட்குடித்து தற்கொலை
மதுரை : மதுரை அருகே, கல்மேடு சந்திரலேகா நகரை சேர்ந்தவர் முத்துமாரி மகள் நாகேஸ்வரி (15) இவர் பள்ளியில் எட்டாவது வகுப்பு முடித்திருந்தார். இந்த நிலையில், விடுமுறையை ஒட்டி தனது உறவுக்கார பெண்ணுடன் சுற்றி திரிந்து வந்தார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த, சிறுமி நாகேஸ்வரி பாத்ரூம் சுத்தம்செய்யும் ஆசிட்டை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நாகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை முத்துமாரி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி நாகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி அருகே ஆட்டோவில் வந்த ஆசாமிகள் கைவரிசை
தென்காசி புளியங்குடி சுப்பிரமணியன்தெரு இப்ராஹிம் மகள் ரபீனா பாத்திமா (24), இவர் இலந்தை குளத்தில் உள்ள எச்.சி.எல்.ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவில் சீருடை அணியாமல் மற்றொரு ஆட்டோடிரைவருடன் மேலும் இரண்டுபேர் பயணம் செய்தனர். ஆட்டோ சிறிதுதூரம் சென்றதும் அவர்கள் அவரிடம் இருந்த ஒன்னே முக்கால் பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு ரபீனாபாத்திமாவை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ரபீனாபாத்திமா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
திரைப்பட கேமராமேன் திடீர் சாவு
சென்னை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் நொம்மேலியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சரத்குமார் 29. இவருக்கு திருமணம் ஆகவில்லை. திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் உதவி கேமராமேனாக பணியாற்றி வந்அதாய். மதுரையில் உள்ள குறும்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்திருந்தார். அவர் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தார். அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் அறையில் தங்கி இருந்தவர் தூங்கியபடியே உயிரிழந்து பிணமாக கிடந்தார். இது குறித்து அவருடைய அண்ணன் சதீஷ்குமார் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் உயிரிஇழந்த உதவி கேமரா மேன் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது சாவு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து தங்க நகை திருட்டு
மதுரை ஜூன் 8 கீரைத்துரையில் வீடு புகுந்து ஐந்தே முக்கால்பவுன் தங்க நகை திருடியதாக உறவுக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கீரைத்துரைமேல தோப்பு கணேசன் மனைவி கவிதா (43), சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். அப்போது இவர் வீடு புகுந்த மர்மநபர் அவர் வீட்டில் வைத்திருந்த ஐந்தே முக்கால் பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு பின்னர் தெரிய வந்தது.இதுகுறித்து கவிதா கீரைத்துரை போலீசில் புகார்செய்தார்.அந்தபுகாரில் மேலூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உறவுக்காரர் உட்ப சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி