மதுரை : மதுரை மாவட்டத்தில், மேலூர் உட்கோட்டம், ஆட்டுக்குளம் பிரிவு பகுதியில், போக்குவரத்திற்கும், பொதுஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், நடு ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி வீடியோ பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில், பிறந்தநாள் கொண்டாடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல்துறை எச்சரிக்கிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்