மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவுப்படி, மதுரை மாநகர முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலா அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் குடில் காளி என்ற காளீஸ்வரன் (வயது 24). இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு.பெத்துராஜ் உத்தரவின் பேரில், அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திரு.அதிகுந்தகண்ணன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று சட்டவிரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திரு.ஜஸ்டின் சரவணன்