மதுரை : மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு (21.05.23)-ம் தேதி ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.கல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் விற்பனை செய்த 22 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7670 லாட்டரி டிக்கட்டுகளும் பணம் ரூபாய்.23610/-ம் லாட்டரியில் மொத்தம் 5,72’200/- பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்