மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத்சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம், புதிய வரி மற்றும் வரிப்பிரிவினை வேண்டி 47 மனுக்களும், பாதாளச்சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டி 1 மனுவும், தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 19 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 3 மனுக்களும், இதர மனுக்கள் 1 மனுவும் என மொத்தம் 72 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் அவர்களால் ,நேரடியாக பெறப்பட்டது.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் திரு.முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திரு.திருமலை, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் திரு.மயிலேறிநாதன், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, கண்காணிப்பாளர்கள் திரு.செந்தில்குமரன், திரு.வீரபாலமுருகன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி