மதுரை : மதுரை அய்யர் பங்களா நாகூர் தெருவை சேர்ந்தவர் ஜெயகணேஷ்பாண்டி (19), சம்பவத்தன்று இவர் நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த சிவசண்முநாதன் (47), என்பவரிடம் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து தல்லாகுளம், கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை காந்தி நகரை சேர்ந்த லிங்கபிரசாந்த் (22) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 3 பேரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி