மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப வேண்டியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டமும், அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப் அவர்களும் உதவி பங்குத்தந்தை சின்னத்துரை அவர்கள் தலைமை ஏற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மத்திய தொகுதியின் பகுதி செயலாளர் திரு. ஸ்டாலின் அவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் சம்பவங்களை எடுத்துரைத்து கண்டன உரையாற்றினார். தொடர்ந்து பங்கு பெற்ற கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சமய நல்லிணத்திற்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி அவர்களுடைய படங்களுக்கு மெழுகு திரி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர் இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்