திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம், போளூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. M.அறிவழகன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, கடலாடி காவல்நிலைய காவல் ஆய்வாளர்
திருமதி. மங்கையர்கரசி, தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் திரு. விமல்குமார் மற்றும் காவலர்கள் இணைந்து கடலாடி மேற்குத் தெருவில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், கடலாடி மேற்கு தெருவைச் சேர்ந்த சீனுவாசன் வ/43 த/பெ குப்பன் என்பவரின் வீட்டின் முன்புறம் 89 வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து,
பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக சீனுவாசனை கைது செய்து, கடலாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், செய்யாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.S.G.சுரேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், செய்யாறு வட்ட காவல் ஆய்வாளர்
திரு. K.நிவாசன், மோரணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மீனாட்சிசுந்தரம் மற்றும் காவலர்கள் இணைந்து, இராந்தம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த Swraj Mazda (TN31BW2734 ) வாகனத்தை சோதனை செய்தபோது,
மீன் பெட்டிகளுக்கிடையே 21 ஆந்திர அரசு மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்ததும், உடனடியாக வாகனம் மற்றும் மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகனத்தில் வந்த 1)முரளி, வ/34 த/பெ சிவலிங்கம், 2)ரவிக்குமார், வ/23 த/பெ செல்வம், மாரியம்மன் கோவில் தெரு, கரிப்பாளையம் கிராமம், மரக்காணம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், ஆகிய இருவரையும் கைது செய்து, மோரணம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.