கரூர் : கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி (49), என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.