சேலம்: மதுவிலக்கு அமலாக்க கூடுதல் இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட உதவி ஆணையாளர் திரு.ஆயதீர்வை அவர்கள் உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற போது கைப்பற்றப்பட்ட ரூபாய் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரத்து 616 கர்நாடக மதுபாட்டில்கள் ஓசூர் சனமாவு காட்டுப்பகுதியில் காவல் அதிகாரிகள் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது
அதேபோல் சட்டவிரோதமாக விற்பனை செய்த போது மதுவிலக்கு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 6000 கர்நாடக மது பாட்டில் மற்றும் பாக்கெட்டுகள் சூளகிரி அழகு பாவி காட்டுப்பகுதியில் திரு.ஆயதீர்வை அதிகாரிகள் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது
இதுவரை சேலம் உட்பட நான்கு மாவட்டத்தில் சுமார் 46.5 லட்சம் மதிப்பிலான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில மதுபாட்டில்கள் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்