பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கை.களத்தூ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் அவரது குழுவினர்கள் வெள்ளுவாடி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து மேற்கொண்ட போது அங்கு மணல் ஏற்றிக்கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது கந்தசாமி (40). த/பெ லட்சுமணன் திரௌபதியம்மன் கோயில் தெரு பசும்பலூர் வேப்பந்தட்டை பெரம்பலூர். வேல்முருகன் த/பெ பாண்டியன் திரௌபதியம்மன் கோயில் தெரு பசும்பலூர் வேப்பந்தட்டை பெரம்பலூர் ஆகியோர்கள் என்பது தெரியவர மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளிகளிடமிருந்து தலா 1/4 யுனிட் வீதம் 1/2 யுனிட் மணல் மற்றும் அவற்றை திருட பயன்படுத்திய 2 மாட்டுவண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி குற்றவாளிகள் இருவரையும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.T.சீராளன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
                                











			
		    



