மதுரை : மதுரை அண்ணா நகரில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சமூக சேவகரும், மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான அண்ணா நகர் முத்துராமன் தலைமை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதை அடுத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை அடுத்து, மக்கள் நீதி மையத்தின் சார்பில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் கிராமத்தில் நடைபெற்ற கிராம கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சனை எடுத்துரைத்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி