இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் (14.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டு புகாரின் தன்மைக்கேற்ப உடனடி நடவடிக்கைக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் வாரம்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.