இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (08/02/2023) காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் ஜானகி என்கின்ற (84) வயதான மூதாட்டி தன்னுடைய வீடு பிரச்சனை தொடர்பாக புகார் மனு அளிக்க வந்திருந்தார் அவரால் முதல் மாடியின் மீது ஏறி வந்து புகார் மனு அளிக்க முடியாத காரணத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி அவர்கள் மூதாட்டியிடம் சென்று புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைத்தார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விசுவேசுவரய்யா (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்