கோவை : மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை என்றும் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. என்று கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், மற்றும் தனிப்பிரிவுகளில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகிய இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். காவல்துறையின் விசாரணையின் போது 64 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் ஆகிய இருதரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். 44 மனுக்களில் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டவாறு தீர்வு காணப்பட்டது. ஆறு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 15 மனுக்கள் மீது ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக விசாரணை நிலுவையில் உள்ளது. 33 நாட்களில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் காவல்துறை விசாரணையின் போது நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று விசாரணை செய்து அம்மனுக்கள் மீது தக்க நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்