கோவை: கோவை ஆத்துப்பாலம் குறிச்சி பிரிவு என். பி. இட்டேரியில் வசிக்கும் அபு என்ற தாடி அபு என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில் களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் அப்பகுதியிலுள்ள ஜமாத் நிர்வாகிகளிடம் புகார் செய்தனர். இதை யடுத்து ஜமாத் நிர்வாகிகளும், பொதுமக்களும் திடீரென்று அந்ந வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அங்கு 150க்கு மேற்பட்ட மது பாட்டிலில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் அபுவுக்கு தர்மஅடி கொடுத்து அவரை போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது