தென்காசி: கடையநல்லூர் பகுதியில் போலீசார் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொதுமக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு சென்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.