ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் பதுக்கி வைத்திருந்த 400 லிட்டர் பாமாயில் பாக்கெட் பறிமுதல். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் – புல்லமடை ரோடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் முறுக்கு கம்பெனியின் பயன்பாட்டிற்காக குடோனில் தலா ஒரு லிட்டர் அளவுள்ள 400 பாமாயில் பாக்கெட்டுகளை பதுக்கி இருப்பதாக வைத்திருந்ததாக தெரிகிறது. இது சம்மந்தமாக, தகவல் அறிந்த ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கள் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையிலான போலீசார்கள் சம்பந்தப்பட்ட நபரின் குடோனை சோதனை செய்த போது பதுக்கி வைத்திருந்த 400 பாமாயில் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரது குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி