திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர்.
இதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டி.ஐ.ஜி. முத்துசாமியும் , எஸ்.பி ரவளி பிரியாவும் போலீசாரின் பணியை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்
பேருந்து நிலையம் மற்றும் பழனி உட் கோட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கிருமி நாசினி மற்றும் தேநீர் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பின்பு காவலர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு சம்பந்தமாக விசாரித்தும், போலீசாருக்கு வரவேண்டிய நிலுவை குறித்தும் கேட்டறிந்தார். போலீசாரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா