திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைரோடு உட்பட பல இடங்களில் எஸ்.பி.ரவளி பிரியா ஆய்வு மேற்கொண்டார். பின்பு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்களை உடனே விட வேண்டும். முன் களப்பணியாளர்களை தடுக்கக் கூடாது. இறப்புக்கு மட்டும் இ.பாஸ் உள்ளதா என கேட்க வேண்டும். எந்த சிபாரிசு வந்தாலும் கேட்காமல் வாகன பறிமுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்பு மணிக்கூண்டு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார். போலீசாரின் பணியை ஊக்கப்படுத்தினார்.