திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை அம்பாத்துரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி, ஏட்டுகள் திரு.சதீஷ்குமார், திரு.செல்வராஜ் ஆகியோர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 250 கிலோ குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.தீவிர வாகன சோதனை மேற்கொண்டு குட்கா கடத்தியவர்களை மடக்கிப் பிடித்த போலீசாருக்கு எஸ்.பி திரு.சீனிவாசன் பாராட்டுகள் தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கினார்.
இதில் புறநகர் போலீஸ் டி.எஸ்.பி திரு.சுகுமார், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா