சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர், சாத்தப்பாடி, புனல்வாசல், செட்டிக்குளம், தெடாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடு போய் வந்துள்ளன, இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்களை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர் மர்ம நபர்கள் இரண்டு பேரும் நாவலூரில் இருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சின்ன புனல்வாசல் வழியாக சென்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பதும் தெடாவூர் புதூரை சேர்ந்த பூமாலை மகன் மணி என்பதும் தெரியவந்தையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் ஒரு ஆட்டையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,