திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி நத்தம் பகுதியில் மலைகளால் சூழப்பட்டு உள்ளதால் அதிக அளவு போலி டாக்டர்கள் உலா வருகின்றனர் .மருந்து கடையில் வேலை பார்த்தவர்கள், மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியராக இருந்தவர்கள் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகிறது.
ஏற்கனவே மூன்று பேர் இந்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். வேம்பார்பட்டியை சேர்ந்த காளியப்பன். இவர் அமமுக பிரமுகர் ஆவார். இவரது கிளினிக்கை மருத்துவ அதிகாரிகள்சோதனை செய்தனர்.
மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக போலீசில் புகார் செய்தனர். இவரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவரது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.