திருவண்ணாமலை: தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம்(54).இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக அரசு அதகரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து வெம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் பாண்டியன் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை காவல் உதவி ஆய்வாளர் திரு. சிலம்பரசன் மற்றும் போலீசார் தூசி கிராமத்திலுள்ள சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கரலிங்கம் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் சங்கர லிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.