தேனி : கண்டமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 1,062 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்து மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.