தர்மபுரி : (21.02.2024) தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் இல்லா கிராமமாக அறிவித்து ஊர் மக்களிடையே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலந்துகொண்டு போதைப்பொருள் மற்றும் கஞ்சா எல்லா கிராமமாக அறிவித்து அவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில் போதை மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் தீங்குகளை குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் இந்த மோட்டுப்பட்டி கிராமத்தை போல முன் உதாரணமாக கருத்து கொண்டு அனைத்து கிராமங்களும் போதை பொருள் மற்றும் கஞ்சா இல்லா கிராமமாக மாற்றி நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் ஊர் மக்களிடையே பேசினார். இதில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி P. மகாலட்சுமி பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு. முத்தமிழ் செல்வன் கலந்து கொண்டனர்.