தேனி: போதை பொருளுக்கு மற்றும் பழக்கத்திற்கான சிறப்பு தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது, அதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட CEDOA மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் திரு.A.ராஜேஷ்குமார் அவர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.