மதுரை : மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா, கள்ளச்சாரயம் இதர போதை பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம் இதர போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் பொது மக்களிடமிருந்து தகவல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 9498181206 என்ற சிறப்பு தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது. மேற்படி தொலைபேசி எண்ணுக்கு கஞ்சா, கள்ளச்சாராயம், சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, இதர போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் தருபவர் குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், தகவலாளிக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்