கோவை: கோவை குனியமுத்தூர், |சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக தயாரித்து தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் உடலில்செலுத்தி விற்பனை செய்த 6 பேரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கோவை பாலக்காடு ரோட்டில் உள்ள குறிச்சி குளம் அருகே போதை மருந்து ஊசிவிற்பனை செய்ததாக குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் சதாம் நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 33 ) ராமநாதபுரம் சுங்கம் பை பாஸ் ரோட்டை சேர்ந்த பீட்டர் செல்வராஜ் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 10 மாத்திரைகள்,பணம் ரூ 7580 பறிமுதல் செய்யப்பட்டது .இதில் தொடர்புடையமேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.