இராணிப்பேட்டை : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள், தலைமையில் இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப் பொருட்கள் ஒழிப்பு தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாகனம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள், கலந்துக் கொண்டார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்