திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில் ரெங்கசமுத்திரம், சன்னதி தெருவை சேர்ந்த பண்டாரம் என்பவரின் மகன் மாயாண்டி 54. என்பவர் போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராதா (பொறுப்பு ) அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 17.02.2022 இன்று குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.