கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போக்சோ வழக்கு குற்றவாளிகளான மகரஜோதி, முத்து முருகன், பிரவீன் குமார் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து குண்டர்
தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் இ.ஆ.ப., அவர்கள் மகரஜோதி, முத்து முருகன், பிரவீன் குமார் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளிகளான மகரஜோதி, முத்து முருகன், பிரவீன் குமார் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.