திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு சரவணக்குமார்(23). என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, சரவணகுமாருக்கு, 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி