ஈரோடு: ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு சென்று உணவு விநியோகம் செய்யும் பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவர், ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 15 வயது சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தை கூறி கடந்த 14ம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மணிமாறணை தேடிவந்த நிலையில் ஈரோடு ரயில் நிலையம் அருகே அந்த சிறுமியுடன் சுற்றித்திரிந்துள்ளார்.
இதையடுத்து மகளிர் காவல் ஆய்வாளர் திரு. தவுலத் நிஷா தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திரு.மணிமாறன் மீது ஆள் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.