திருச்சி: திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் 21. இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் கவியரசன் அந்த சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டனர். கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.