கோவை: கோவை இருகூர் காமாட்சி புரத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் பிரகதீஸ் (வயது 21 ) இவர் ராமநாதபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் குரும்பபாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்தனர் .இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கண்டித்தனர். மாணவியை ஆசை வார்த்தை காட்டி பழனிக்கு கடத்திச் சென்றுவிட்டார் மாணவியை காணவில்லை என்பது சூலூர் போலீசில் புகார் செய்யபட்டது” போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது . போலீசார் பழனிக்கு சென்று இருவரையும் காவல் நிலையத்துக்கு வைத்து அழைத்து வந்தனர். பிரகதீஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.