பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 23. இவர் ஒரு சிறுமியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் அந்த சிறுமியின் தந்தைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.ரஷிதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.