ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிய 49 பேர் மீதும், சிக்னலை மீறியதாக 219 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த 943 பேர் உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,932 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.