திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நகர் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சேரலாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பழனி சாலையில் செல்லும் வாகனங்கள் இனிமேல் வடக்கு ரத வீதி வழியாக வாணி விலாஸ் சிக்னலை அடையும். அதன்படி பழனி சாலையில் கல்லறை மேடு முதல் வாணிவிலாஸ் சிக்னல் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைக்கு அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள்
அபிராமி தியேட்டர் அருகே இடது புறமாக சென்று வடக்கு ரத வீதியில் இணைந்து கொள்ளலாம்
அதேபோல் வடக்கு ரதவீதி 108 விநாயகர் கோயில் ஜங்ஷன், ஈஸ்வரி லாட்ஜ் ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் இடையே உள்ள சாலைகள் மூலம் பழனி ரோடு செல்லும் நபர்கள் பழனி ரோட்டில் வலதுபுறமாக தான் செல்ல வேண்டும்.
பஸ் நிறுத்தம் இடமாற்றம்
திண்டுக்கல் வாணி விலாஸ் ஆரியபவன் பஸ் நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டு சோனா டவர் அருகே நிறுத்தப்படும்
அதேபோல் வடக்கு ரத வீதி ஈஸ்வரி லாட்ஜ் பேருந்து நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டு வடக்கு ரதவீதி இலைக்கடை பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்தப்படும்
வாணி விலாஸ் சிக்னல் சிண்டிகேட் வங்கி பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை தெற்கு வாயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேன் ஸ்டாண்ட் அருகே மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வர இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு நகர் போக்குவரத்து காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா