திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பொன்னேரி வட்ட வழங்க அலுவலர் பறிமுதல் செய்தார். பொன்னேரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாரின் பேரில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் உத்தரவின் பேரில் உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர்பிரபு, ரேஷன் கடைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாலை அருகில் மூட்டை மூட்டையாக புதரில் ரேஷன் அரிசி இருப்பதாக வந்த தகவலின் பெயரில் . சம்பவ இடத்திற்கு சென்ற போது வட்ட வழங்கல் அலுவலரை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி சென்று தலைமறைவானது இதனை அடுத்து வட்ட வழங்கல் அலுவலர் 600 எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தச்சூர் கூட்டு சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்