திருவள்ளூர்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நீதிமன்ற வளாகத்தில் பொன்னேரி கிரிமினல் வழக்கறிஞர்கள் பார் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் பொன்னேரி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் பொன்னேரி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் ஐயா.நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். அதன்பின் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து சமூக விரோதிகளால் வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் மற்றும் மரணம் அடைவதால் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும், வழக்கறிஞர் தூயவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மூத்த வழக்கறிஞர் ராதா மணாளன், சங்க ஒருங்கிணைப்பாளர் காந்தி,சங்க செயலாளர் வழக்கறிஞர் விஜய்,பொருளாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, விளையாட்டு துறை செயலர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள்
துணை தலைவர் சி.எம்.சைமன்,துணை செயலாளர் கார்த்திக்,வழக்கறிஞர் பூதூர் சீனிவாசன்,பிரவீன் குமார்,நூலகர் விக்னேஷ், துணை செயலாளர்கள் பிரகாஷ்,பிரபு இணை செயலாளர்கள் முத்துராமன், சீனியுவராஜ், சுரேஷ், கந்தவேல், லெனின் மற்றும் கோகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















