தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. சோ. மகேஸ்வரன்.B.COM., BL அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 75மனுக்கள் பெறப்பட்டு 72 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.