வேலூர் : வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட காவல் அலுவலகம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புகார் தாரர்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களைப் பேற்று கனிவுடன் குறைகளை கேட்டறிந்து (13.11.2024) அன்று 30 மனுக்களை பெற்றுக் கொண்டு புகார் மனுக்களின் மீது அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது டி.எஸ்.பி.க்கள் சரவணன், இருதயராஜ் மற்றும் அலுவலர்கள் என காவல்துறையினர் என பலர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி