திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்டநடத்தைக்காரர்கள, செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, துரிதமாக செயல்பட்டு, திருச்சி மாநகரத்தில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களை விசாரணை செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்து, செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய 98 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 80 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி செல்போன் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்ட வந்த 14 குற்றவாளிகளை காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.