கடலூர்: கொரானா உருமாறிய வைரஸ் தொற்றினால் பாதிப்பு எண்ணிக்கை இந்திய அளவில் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ், தலைமையில் (5000) ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முக கவசம் (மாஸ்க் )வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டறிக்கைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த துண்டறிக்கையினை சுகாதார ஆய்வாளர் மோகன் குமார், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ரத்தினவேல், மருத்துவர் மணிகண்டன், திருநகர் பங்கு தந்தை பாதர் ஜேம்ஸ், மாடர்ன் பிக்சர் சினிமா புரொடியூசர் பிரசாத், ஜெயராஜ் மற்றும் கிழக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களும், தன்னார்வ அமைப்பினை சார்ந்தவர்களும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.