பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள புதிய பேருந்து நிலையத்தில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக நீர் மோர் பந்தல் ஒன்றினை அமைத்து அதனை (14.04.20230, -ம் தேதி மதியம் 01.15 மணியளவில் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோரினை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பழனிச்சாமி, பெரம்பலூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சக்திவேல், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.