கோவை: சரவணம்பட்டி பக்கம் உள்ள கணபதிபுதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் 41 இவர் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டின் தரைத்தளத்தில் நேற்று ஒரு ஆசாமி அவரது வீட்டிற்குள் புகுந்து இவரது தம்பி செல்வராஜ் உடைய பைக்கை திருடினான்..இதை பார்த்த செல்வராஜ் தாய் சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த ஆசாமி ஓடதொடங்கினான். அவனை பாலசுப்ரமணியமும் அவரது தம்பி செல்வராஜ் துரத்திப் பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர்.
விசாரணையில் அவன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைசேர்ந்த கரன் 26 என்பது தெரியவந்தது தற்போது இவன் தற்போது கோவை பீளமேட்டில் வசித்து வருகிறான். இவனிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.