திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அருகே உள்ள நூலகத்தில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை மாலை என நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர் இந்த நிலையில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் பா.அலெக்சாண்டர் நூலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். நூலகத்திற்கு என்னென்ன அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி நூலக பணியாளரிடம் கேட்டறிந்தார். புதிதாக நூலகத்தை வர்ணம் தீட்டி நூலகத்திற்கு இன்னும் புத்தகங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். அதற்கான நடவடிக்கையை மிக விரைவில் எடுப்பதாக மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் உறுதி அளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு