மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்தை வழிப்பறிசெய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து, ராஜா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர், அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆரப்பாளையம், மேல பொன்னகரம் இரண்டாவது தெருவை சேர்ந்த கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் (20). என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி