ஈரோடு : ஈரோடு பெருந்துறை அருகே வெள்ளோடு பெரிய தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி அவருடைய மகன் ராஜேஸ் வயது (27), இவர் கோவையில் தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார் கோவையில் இருந்து வெள்ளோட்டுக்கு சென்று கொண்டு இருந்தார் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொண்டுருந்த போது எதிர் பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது இந்த விபத்தில் அக்கம் பக்கத்தினர் மிட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பெருந்துறை மெடிக்கல் கல்லுரி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி ராஜேஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார் இது குறித்து பெருந்துறை போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஒட்டி வந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :